என்றென்றும் ரசிகர்கள் கொண்டாடும் தோழா படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது – இயக்குநரின் நெகிழ்ச்சிப் பதிவு
TV9 Tamil News March 26, 2026 02:48 AM

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வம்சி பைடிபைலி. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் தொடர்ந்து ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடியை மையமாக வைத்து படங்களை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் கடந்த 25-ம் தேதி மார்ச் மாதம் 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தோழா. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவானது. இரண்டு மொழிகளிலும் வெளியாகி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

காமெடி செண்டிமெண்டை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் நாகர்ஜுனா இருவரும் முன்னணி வேடத்தில் நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் தமன்னா பாட்டியா,
ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீனிவாஸ் சாயீ, நிக்கிதா அனில், கேப்ரியல்லா டிமெட்ரியாட்ஸ், கல்பனா, விவேக், தனிகெள பரணி, மனோபாலா, ஆடுகளம் நரேன், ரகு கருமாஞ்சி, சந்தான பாரதி, ராஜா ரவீந்திரன், பிரபாஸ் ஸ்ரீனு, சத்திய கிருஷ்ணன், உமா பத்மநாபன், பூஜிதா பொன்னடா, பரத் ரெட்டி, பிரவீன், தாகுபோத்து ரமேஷ், கருப்பு பாண்டி, ராம்ஜி, அம்பதி ஸ்ரீநிவாஸ், காதம்பரி கிரண் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் பேசியது வைரலாகி வருகின்றது.

10 ஆண்டுகளை நிறைவு செய்தது தோழா படம்:

இந்த இதயத்தை இன்னும் கொண்டாடும் பார்வையாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் இதனை சாத்தியமாக்கிய நடிகர்கள் நாகர்ஜுனா, கார்த்தி மற்றும் தமன்னாவிற்கு நன்றி. மேலும் தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமா இந்த கனவை நினவாக்கியதற்கு நன்றி என்றும் இயக்குநர் வம்சி பைடிபைலி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… சிரிச்சுக்கிட்டே ஒரு ஹாரர் படம் பார்க்கனுமா? அப்போ மலையாள சினிமாவில் வெளியான இந்த பிரகம்பனம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்

இயக்குநர் வம்சி பைடிபைலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

#OOPIRI #THOZHA… 10 years to this amazing Lifetime memory.

Thank You @iamnagarjuna Sir, @Karthi_Offl Brother , @tamannaahspeaks & @PVPCinema for making this possible.

My Deepest Gratitude to the Audience who still celebrate this peice of Heart… ❤️ pic.twitter.com/NJk7Z7C6o7

— Vamshi Paidipally (@directorvamshi)

Also Read… VJ Parvathy: பிக்பாஸை தொடர்ந்து வெப் சீரிஸில் களமிறங்கிய விஜே.பார்வதி.. யாருடன் தெரியுமா?

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.