#BREAKING திமுக கூட்டணியில் SDPI,முக்குலத்தோர் புலி படை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!
Top Tamil News March 26, 2026 01:48 AM

திமுக கூட்டணியில் SDPI,முக்குலத்தோர் புலி படை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இரு கட்சிகளும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளன.


திமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து, 175 இடங்களில் உதயசூரியன் போட்டியிடவுள்ளது. திமுக கூட்டணியில் ஒன்பது கட்சிகளுக்கு 66 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 59 தொகுதிகளில், கூட்டணி கட்சி் வேட்பாளர்கள், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடுகின்றனர். மதிமுக 3, மமக 3, கொமதேக 2 என 7 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் SDPI மற்றும் முக்குலத்தோர் புலிப் படை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இரு கட்சிகளும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளன. இதேபோல் திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய SDPI கட்சி தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, “சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் SDPI கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி என்ன என்பது நாளை இறுதியாகும் என்றும், உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளோம்” என்றார்.


 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.