வேலூர் மாவட்டத்தில் விவசாயி சுந்தரமூர்த்தி, உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மூத்த மகள் சாரு அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தன் தந்தையின் மறைவு அந்த மாணவிக்கு ஈடு செய்ய முடியாத பெரும் சோகத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் மாலை அவரது தந்தையின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
தந்தை இறந்த துக்கத்தில் மாணவி கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்த நிலையில், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கணிதத் தேர்வை எழுதுமாறு அவருக்கு தைரியம் கூறினர். இதையடுத்து, தந்தையை இழந்த ஆறாத துயரத்திலும் தனது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மாணவி சாரு தேர்வு எழுதச் சென்றார்.
தந்தை இறந்த சில மணி நேரங்களிலேயே மாணவி பொதுத்தேர்வு எழுதியது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.