சோகம்..! இளம் வயதில் நடிகை ஹர்ஷில் காலியா சாலை விபத்தில் உயிரிழப்பு..!
Top Tamil News March 27, 2026 08:48 AM

 ராஜஸ்தானைச் சேர்ந்த மாடல் ஹர்ஷில் காலியா. ‘க்ரைம் நெக்ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்துள்ள அவர், இசை வீடியோக்களிலும் தோன்றியுள்ளார்.

சமூக ஊடகங்களில் கணிசமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர், நேற்று முன் தினம் படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். ஷிப்ரா பாத் சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிரில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி, திடீரென கவிழ்ந்தது.

இதில் ஹர்ஷில் காலியா, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.