பத்திரம் மக்களே... இன்று முதல் 3 நாட்களுக்கு 4°C வரை உயர வாய்ப்பு.. அவசியமில்லாம வெளியே போகாதீங்க!
Dinamaalai March 27, 2026 09:48 AM

பத்திரமா இருங்க மக்களே.. அவசியமில்லாம வீட்டை விட்டு வெளியே போகாதீங்க. தமிழகம் முழுவதுமே இன்று முதல் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மார்ச் 27 முதல் மார்ச் 29 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பிலிருந்து 2°C முதல் 4°C வரை படிப்படியாக உயரக்கூடும். குறிப்பாக உள்தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். சில இடங்களில் வெப்பநிலை 40°C-ஐ நெருங்கவோ அல்லது தாண்டவோ வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 35°C முதல் 37°C வரை பதிவாகக்கூடும். கடல் காற்றின் வேகம் குறைவாக இருப்பதால் ஈரப்பதம் அதிகரித்து புழுக்கம் அதிகமாக இருக்கும்.

மேற்கு திசை காற்றின் மாறுபாடு மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வறண்ட வானிலை நிலவுவதே இந்தத் திடீர் வெப்ப உயர்வுக்குக் காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம், மார்ச் 28 முதல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்:

  • மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.

  • போதுமான அளவு தண்ணீர், இளநீர் மற்றும் மோர் பருகி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும்.

  • தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.

  • © Copyright @2026 LIDEA. All Rights Reserved.