"புனிதத்தை கெடுக்காதீங்க!" - வேலூர் கோவிலில் ரீல்ஸ் எடுத்த ஜோடி - இந்து முன்னணி புகார்!
Top Tamil News March 27, 2026 09:48 AM

வேலூர் கோட்டையில் ஜலகண்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் மட்டுமல்லாமல் மாநிலத்தில் இருந்தும் தினமும் பக்தர்கள் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த கோவில் வளாகத்தில் வாலிபர் ஒருவர் இளம் பெண்ணுடன் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து இந்து முன்னணியினர், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட ஜோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் மனதை புண்படுத்தும் வகையிலும் ஆபாசமாக நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.