“ஐயோ…. என் புள்ளய காப்பாத்துங்க” கண் முன்னே மூச்சுத் திணறிய மகன்…. பக்கத்து வீட்டுக்காரர் செய்த மிராக்கிள்…. வைரலாகும் வீடியோ….!!
SeithiSolai Tamil March 27, 2026 08:48 AM

தென் கொரியாவையே அதிர வைத்திருக்கும் இந்தச் சம்பவம், பார்ப்பவர் நெஞ்சை ஒரு நிமிடம் உறைய வைக்கிறது. ஒரு சின்னக் குழந்தை தான் சாப்பிட்ட உணவு தொண்டையில் சிக்கி, மூச்சு விட முடியாமல் தவித்த அந்த நொடிகள் நரக வேதனைக்கு சமமானவை. தன் கண் முன்னாலேயே தன் பிள்ளை உயிருக்கு போராடுவதைப் பார்த்த அந்தத் தாய், அலறியடித்துக் கொண்டு உதவி தேடி ஓடியது எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சையும் கரைய வைக்கும். பக்கத்து வீட்டுக்காரர் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைக்காத நிலையில், அந்த இடமே மரண பயத்தில் மூழ்கியது.

சரியான நேரத்தில் அந்த நபர் கையில் எடுத்த அந்த ‘ஆன்டி-சோக்கிங்’ (Anti-Choking) டிவைஸ்தான் அந்தச் சிறுவனுக்கு மறுபிறவி கொடுத்திருக்கிறது. மின்னல் வேகத்தில் அந்த கருவியைப் பயன்படுத்தி சிறுவனின் தொண்டையில் இருந்த அடைப்பை அவர் நீக்கிய போது, அந்தத் தாயின் முகத்தில் தெரிந்த நிம்மதிக்கு விலையே இல்லை. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “மருத்துவமனைக்குத் தூக்கிட்டுப் போற கேப்ல என்ன வேணா நடந்திருக்கலாம், ஆனா இந்த ஒரு கருவி அந்த உயிரைக் காப்பாத்திருச்சு” என நெட்டிசன்கள் அந்தப் பக்கத்து வீட்டுக்காரரைக் கொண்டாடி வருகிறார்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.