“ஹர்திக் பாண்டியா செஞ்ச அந்த ஒரு விஷயம்” வான்கடே ஊழியர்களுக்கு விழுந்த மெகா பரிசு…. டி20 வேர்ல்ட் கப் ரகசியம் அவுட்….!!
SeithiSolai Tamil March 27, 2026 07:48 PM

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா, மும்பை வான்கடே மைதானத்தின் பராமரிப்பு ஊழியர்கள் அனைவருக்கும் பண வெகுமதி மற்றும் பரிசுகளை வழங்கி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை (T20 WC) தொடருக்காக வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்டியா மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

அந்தச் சமயத்தில், மைதானத்தைப் பராமரிப்பதிலும், அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் ஊழியர்கள் இரவு பகல் பாராமல் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். தன்னுடைய கடினமான பயிற்சி காலங்களில் நிழலாக இருந்து உதவிய அந்த ஊழியர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்த அன்பளிப்பை அவர் வழங்கியுள்ளார்.

“நான் ஜெயிக்கிறதுக்கு இவங்களும் ஒரு காரணம்” என ஊழியர்களைப் பெருமைப்படுத்திய பாண்டியாவின் இந்தச் செயல், இப்போது இணையத்தில் செம வைரல். மைதானத்தில் பந்து வீசுவதிலும், பேட்டிங் செய்வதிலும் காட்டும் அதே வேகத்தை, மனிதநேயத்திலும் காட்டி ரசிகர்களின் மனதை வென்றுள்ளார் ஹர்திக் பாண்டியா.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.