கூட்டணிக்குள் சலசலப்பு- அதிமுக தலைமைக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்!
Top Tamil News March 27, 2026 07:48 PM

பழனி தொகுதியை அதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்த நிலையில் பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி தொகுதியை சேர்ந்த பகுதியாக இருந்து வருகிறது இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்த நிலையில் பாஜகவினர் பல வருடங்களாக பழனி தொகுதியில் பிஜேபி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல உதவிகள் பல பணிகள் செய்துள்ளதாகவும், எங்களுக்கு பழனி பழனி தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் பாஜக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து மேல் மழை ஒன்றிய பாஜக நிர்வாகிகள் தேங்காய் உடைத்தும் வேண்டுதல்கள் வைத்தும் பாஜகவிற்கு பழனி தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதுமட்டுமின்றி, பழனி சட்டமன்ற தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்படாததால் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினரில், தொண்டர் ஒருவர் மாடி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி தொகுதியில் கடுமையாக களப்பணி ஆற்றியும் தொகுதி கிடைக்கவில்லை என சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.