அம்மாக்களின் ஆசியோடு தொடங்குகிறேன்!.. பெரம்ப்பூரில் பிரச்சாரத்தை துவங்கிய விஜய்!..
Webdunia Tamil March 30, 2026 05:48 PM


தவெக தலைவர் விஜய் இன்று பெரம்பூரில் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது மக்கள் முன்பு பேசிய விஜய் ‘எனக்கு மிகவும் பிடித்த இடம் பெரம்பூர்.. தாய் வீட்டிலிருந்து பரப்புரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. இந்த திமுக அரசிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். திமுக எனும் தீயசக்தியை ஒழிக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் மனதுக்கு நெருக்கமாக இருந்தாலும் நம் வீட்டு வாசலில் தொடங்க வேண்டும் அல்லவா. அதனால்தன் பெரம்பூரிலிருந்து துவங்குகிறார். ஒன்றுக்கும் உதவாத கட்சி திமுக.. பெண்கள் பாதுகாப்பு இல்லாத, போதை பொருள் அதிகம் இருக்கும் தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்..

ஒரு பெண் கழிப்பறைக்கு செல்லமுடியவில்லை. அங்கு கொலை நடக்கிறது. டீக்கடையில் கொலை நடக்கிறது.. இது என்ன நாடா? இல்லை காடா?.. ஸ்டாலின் சாருக்கு மக்கள் நலன் முக்கியமில்லை.. குடும்பத்தோடு கொள்ளையடிப்பதுதான் முக்கியம்.. அவருக்கு மக்கள் மீது எந்த கவலையும் இல்லை. 5 வருடங்கள் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினால் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியவில்லை என்றால் எதற்கு பதவி? எதற்கு அதிகாரம்?..

உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத திமுக அரசை தூக்கி எறிய வேண்டும்.. டாஸ்மாக்கில் மட்டும் ஆயிரம் கோடி, நகராட்சி துறையில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடிச்சிருக்காங்க..
வழக்கம்போல ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள்.. வாங்கிக் கொண்டு அவர்கள் காதுகளில் விசில் ஊதி அனுப்புங்கள்.. இது ஒரு தலைமுறைக்கான தேர்தல்.. விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள்’ என அவர் பேசினார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.