நாளை மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார் தவெக தலைவர் விஜய். இதனையடுத்து அன்றைய தினம் திருச்சியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட 4 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளார். பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஜய்யின் பயண விவரங்கள், காவல்துறையின் நிபந்தனைகள் என்ன என்பது விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.