இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. 33 கேள்விகள் கேட்கப்படும்.. சாதி வாரி கணக்கெடுப்பும் உண்டா?
Webdunia Tamil April 01, 2026 12:48 PM

இந்தியாவில் 2027-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 30 வரை நடைபெறவுள்ள இந்த முதற்கட்டத்தில், வீடுகள் பட்டியல் மற்றும் வசதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.

இதில் குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பறை, வாகனங்கள் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்படும். சுமார் 30 லட்சம் பணியாளர்கள் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் செயலிகளை பயன்படுத்த உள்ளனர்.

இந்த கணக்கெடுப்பின் மிக முக்கியமான அம்சம், சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக தேசிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. எதிர்க்கட்சிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, தனிநபரின் சாதி மற்றும் உட்பிரிவு குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். இது சமூக நீதி மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான கொள்கைகளை வகுக்க உதவும் என அரசு தெரிவித்துள்ளது.

2011-க்குப் பிறகு 2021-ல் நடக்க வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா சூழலால் தள்ளிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.