பிரீமியம் பெட்ரோல் விலை ரூ.11 உயர்வு.. டீசல் விலை ரூ.1.50 உயர்வு: ரூ.2 லட்சத்தை தாண்டியது விமான எரிபொருள்!
Webdunia Tamil April 01, 2026 12:48 PM

இந்தியன் ஆயில் நிறுவனம் டெல்லியில் பிரீமியம் ரக எரிபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதன்படி, XP100 ரக பிரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.11 அதிகரிக்கப்பட்டு, தற்போது ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ரூ.149 ஆக இருந்தது. அதேபோல், Xtra Green பிரீமியம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயர்ந்து, ரூ.92.99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், விமான எரிபொருள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் ரூ.2,07,341 ஆக உயர்ந்துள்ளது. இது இதற்கு முன்பு இருந்த விலையை விட மிக அதிகம்.

வரலாற்றிலேயே விமான எரிபொருள் விலை ரூ.2 லட்சம் என்ற மைல்கல்லை தாண்டுவது இதுவே முதல் முறை. கடந்த 2022-ல் ரஷ்யா-உக்ரைன் போரின் போது ஏற்பட்ட விலையேற்றமே இதுவரை உச்சமாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு விமான கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்பது பயணிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.