தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மட்டுமல்லாமல் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். எனவே வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக இன்று காலை அவர் விமானம் மூலம் சென்னை வந்தார். வேட்பு மனு தாக்கல் முடிந்தபின் அவர் போலீசார் அனுமதி கொடுத்திருந்த இடத்தில் நின்று வாக்குகள் சேகரித்தார்..
வழக்கம்போல் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.. மேலும் கரூர் ஒரு சூழ்ச்சி.. ஜனநாயகன் படம் வெளிவராதது கூட்டு சூழ்ச்சி.. ஜனநாயகம் படம் வெளிவந்தால் அது தேர்தலில் தவெகவுக்கு ஒரு ஆயுதமாக மாறும் என நினைத்து திட்டமிட்டு முடக்கிவிட்டனர்’ என்று பேசினார்.
வழக்கம்போல விஜயை பார்க்கவும் அவரின் பேச்சைக் கேட்கவும் அவரின் ரசிகர்களும், தவெக தொண்டர்களும், பொதுமக்களும் நிறைய பேர் அங்கே கூடிவிட்டனர்.. அப்போது வெயிலில் இரண்டு பெண்கள் மயக்கம் அடைந்தனர்.. உடனே தவெகவினர் அவர்களை மீட்டு முதலுதவி செய்து ஆம்புலன் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதியதில் ஒரு காவலரின் கால் முறிந்தது.
ஒருபக்கம், சில பெண்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டும் விஜயை பார்க்க வந்திருந்தனர்.. குழந்தையை தூக்கிக் கொண்டு என்னை பார்க்க வரவேண்டாம் என விஜய் பலமுறை சொல்லியும் பல பெண்கள் அதைக் கேட்பதில்லை.. அதே போல் இளைஞர்கள் வழக்கம் போல விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து பைக்கில் வந்தார்கள்.. சாலை விதிகளை கடைபிடிக்காமல் அவர்கள் வாகனங்களை ஓட்டி வந்ததால் பொது மக்களுக்கு அவதியை ஏற்படுத்தியது.