தனக்கு தானே விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை.. மனைவி கொடுமை காரணமா?
WEBDUNIA TAMIL April 02, 2026 09:48 PM

ஹைதராபாத்தில் 40 வயது மதிக்கத்தக்க தனியார் மருத்துவமனை மருத்துவர் வினோத் குமார், தனது காரிலேயே விஷ ஊசி குத்தி கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீசரா பகுதியை சேர்ந்த இவர், அவுட்டர் ரிங் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் மயங்கி கிடந்ததைக்கண்டு பொதுமக்கள் போலீசாருக்குத்தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது கையில் ஊசி செலுத்தப்பட்டிருப்பதையும், காருக்குள் காலி சிரிஞ்ச் இருப்பதையும் கண்டெடுத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

18 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வினோத் குமாரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மனைவி மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மனைவியின் தொடர் தொல்லை மற்றும் மன உளைச்சல் காரணமாகவே தனது மகன் இந்த முடிவை எடுத்ததாக தந்தை குற்றம் சாட்டியுள்ளார். தற்கொலைக்கு முன் அவர் யாருடனாவது பேசினாரா என்பது குறித்து தொலைபேசி உரையாடல்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.