திருவள்ளூரில் பயங்கரம்… கோழி முட்டையை குறிவைத்த பாம்பு.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. பதறவைக்கும் பின்னணி…!
SeithiSolai Tamil April 02, 2026 09:48 PM

திருவள்ளூர் மாவட்டம் அருகே வீட்டின் கூரையில் இருந்த முட்டைகளை எடுக்க முயன்ற தேவிகா என்ற பெண், அங்கு மறைந்திருந்த பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் தனது வீட்டு உபயோகத்திற்காக கூரையில் கோழிகள் இட்ட முட்டைகளைச் சேகரிக்க அவர் சென்றபோது, எதிர்பாராத விதமாகப் பெரிய பாம்பு ஒன்று அங்கு சுருண்டு கிடப்பதைக் கண்டு அலறியடித்து ஓடி வந்துள்ளார்.

மேலும் இவரின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக இது குறித்து வனத்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு கூரையில் பதுங்கியிருந்த அந்தப் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தனர்.

இந்நிலையில் பிடிபட்ட பாம்பு ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் தேவிகாவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து கூரையில் முட்டை திருட வந்த பாம்பின் செயலால் அந்த கிராம மக்கள் தற்போது மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.