இன்றைய பஞ்சாங்கம் (03-04-2026)
திதி: இன்று காலை 08:42 வரை பிரதமை, பின்னர் துவிதியை.
நட்சத்திரம்: இன்று இரவு 07:24 வரை சித்திரை, பின்னர் சுவாதி.
யோகம்: சித்த யோகம்.
நல்ல நேரம்: காலை 09:30 - 10:30 | மாலை 04:30 - 05:30.
ராகு காலம்: காலை 10:30 - 12:00.
எமகண்டம்: மதியம் 03:00 - 04:30.
சந்திராஷ்டமம்: பூரட்டாதி (மீனம் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடக்கம்).
மேஷம்
இன்று உங்களுக்கு அமைதியான நாளாக அமையும். குடும்பத்தில் நீண்ட நாள் எண்ணிய சுப நிகழ்ச்சி தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.
அறிவுரை: எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.
ரிஷபம்
பணப் பரிவர்த்தனைகளில் இன்று கூடுதல் கவனம் தேவை. வேலையில் சராசரி நிலையே காணப்படும், இருப்பினும் உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்து நற்செய்திகள் வரலாம்.
அறிவுரை: உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
மிதுனம்
தொழில் மற்றும் அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். நிலுவையில் இருந்த பண வரவுகள் வந்து சேரும். உயர் அதிகாரிகளுடன் முக்கிய விவாதங்களில் ஈடுபட்டுப் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.
அறிவுரை: கடன் கொடுப்பது அல்லது வாங்குவதைத் தவிர்ப்பது மன உளைச்சலைக் குறைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு / நீலம்.
கடகம்
இன்று உங்கள் பொறுமைக்குச் சோதனை ஏற்படும் நாளாக இருக்கலாம். உறவினர்களுடனான கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு இக்கட்டான நேரத்தில் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும்.
அறிவுரை: ஆவணங்களைச் சரிபார்க்காமல் கையெழுத்திட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
சிம்மம்
இன்று உங்களுக்கு மிகவும் அற்புதமான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்திருந்த தம்பதியினரிடையே ஒற்றுமை ஏற்படும். செல்வாக்கு மிக்க நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
அறிவுரை: தேவையற்ற பயத்தைத் தவிர்த்துத் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கன்னி
இன்று அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கலாம். தொழில் நிமித்தமாகத் திட்டமிடாத பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையத் தொடங்கும். பழைய கடன்களை அடைக்க வழி பிறக்கும்.
அறிவுரை: வாகன பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம், பயணத்தில் வேகம் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
துலாம்
பழைய சிக்கல்களுக்கு உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் இன்று தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலை சீராக இருக்கும். நண்பர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள்.
அறிவுரை: உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து நிதானமாகப் பேசவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்.
விருச்சிகம்
திடீர் பயணங்கள் மனதிற்குச் சோர்வைத் தந்தாலும், அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தூக்கமின்மை குறைந்து மன அமைதி பெறுவீர்கள்.
அறிவுரை: வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டுச் செயல்படுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.

தனுசு
இன்று உங்களுக்கு லாபகரமான நாள். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். மூத்த சகோதரர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்கத் திட்டமிடுவீர்கள்.
அறிவுரை: குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
மகரம்
அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். கடின உழைப்பிற்கான பலன் சமூகத்தில் மதிப்பைக் கூட்டும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.
அறிவுரை: புதிய வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கரும் நீலம்.
கும்பம்
அதிர்ஷ்டம் அதிகரிக்கும் நாள். தந்தையின் வழியில் சொத்துக்கள் வந்து சேர வாய்ப்புள்ளது. தொலைதூரப் பயணங்கள் மூலம் நன்மைகள் நடக்கும். தெய்வ நம்பிக்கை மனதிற்குப் பேரமைதியைத் தரும்.
அறிவுரை: மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது சிறந்தது.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு.
மீனம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால், மிக முக்கியமான முடிவுகளைத் தள்ளி வைப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
அறிவுரை: பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. விநாயகரை வழிபாடு செய்து அமைதியாக இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை.