திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குப் புதுச்சேரி நீங்கலாகத் தமிழகத்தில் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 16 மாவட்டங்களில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள உத்தேசப் பட்டியலில் பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது.
தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி: கிள்ளியூர் (ராஜேஷ் குமார்), விளவங்கோடு (தாரகை கத்பார்ட்), குளச்சல் (பிரின்ஸ் / லாரன்ஸ் / பினு லால்).
நெல்லையில் நாங்குநேரி (காமராஜ் / ரூபி மனோகரன்), அம்பாசமுத்திரம் (காமராஜ் / வி.பி.துரை).
தென்காசியில் சங்கரன்கோவில் - தனி (வெள்ளப்பாண்டி / பாக்கியராஜ்).
தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம் (ஊர்வசி அமிர்தராஜ்).
விருதுநகரில் சிவகாசி (அசோகன் / சொக்கர்).
ராமநாதபுரத்தில் திருவாடானை (கரு மாணிக்கம்).
சிவகங்கையில் காரைக்குடி (மாங்குடி).

மத்திய மற்றும் டெல்டா மாவட்டங்களில் மதுரை: மேலூர் (கார்த்திகேயன் / ரவிச்சந்திரன்), உசிலம்பட்டி (ராஜா முஹம்மது / கார்த்திகேயன்). திருச்சி: துறையூர் - தனி (லெனின் பிரசாத்). புதுக்கோட்டை: அறந்தாங்கி (ராமச்சந்திரன்). மயிலாடுதுறை: மயிலாடுதுறை (ராஜ்குமார்).
மேற்கு மற்றும் கொங்கு மண்டலங்களில் ஈரோடு: ஈரோடு கிழக்கு (மக்கள் ராஜன் / ஈ.வி.கே.எஸ். சஞ்சய்). கோவை: சிங்காநல்லூர் (மயூரா ஜெயக்குமார் / சக்திவேல் கவுண்டர்), கவுண்டம்பாளையம் (VMC மனோகர் / சக்திவேல் கவுண்டர்). நீலகிரி: ஊட்டி (கணேஷ் / நரேஷ் சந்திரன்). சேலம்: ஆத்தூர் (அர்த்தநாரி).

வட மாவட்டங்களில் சென்னை: வேளச்சேரி (அசன் / ஹசீனா சையத்). காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் - தனி (செல்வப்பெருந்தகை). திருவள்ளூர்: பொன்னேரி - தனி (துரை / இமயா கக்கன் / ரஞ்சன்குமார்). ராணிப்பேட்டை: சோளிங்கர் (முனிரத்னம் / பொன்னம்பலம்). கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி (செல்லக்குமார்), ஊத்தங்கரை - தனி (குப்புசாமி / ஆறுமுகம்). தர்மபுரி: பென்னாகரம் (சுமதி அன்பரசு / தமிழ் குமரன்). கடலூர்: கடலூர் (PV ராஜேந்திரன் / ராதாகிருஷ்ணன்). தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் களம் காண வாய்ப்புள்ளது.
ஈரோடு கிழக்கு, நாங்குநேரி மற்றும் வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் உத்தேசப் பட்டியலில் உள்ளதால், இறுதிப் பட்டியலில் மாற்றம் இருக்கலாம்.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை என்பது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.