“வாகனத்தை விட்டு இறங்கி வந்த விஜய்!” – வெயிலில் நின்றவர்களுக்குக் குளிர்பானம் வழங்கிய தவெக தலைவர்.. திருச்சியில் நெகிழ்ச்சிச் சம்பவம்..!!
SeithiSolai Tamil April 03, 2026 12:48 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு நடத்திய பிரச்சாரத்தின் போது, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காட்டிய அன்பு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தனது பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்கி வந்த விஜய், அங்கிருந்த பொதுமக்களுக்குத் தனது கைகளாலேயே குளிர்பானங்களை வழங்கினார். வாட்டி வதைக்கும் வெயிலிலும் தவெக-விற்காகக் காத்திருந்த மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் அவர் செய்த இந்தச் செயல், அங்கிருந்தவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

“>

 

அரசியலில் மட்டுமல்லாது, மனிதாபிமானத்திலும் தான் ஒரு ‘தளபதி’ என்பதை நிரூபிக்கும் வகையில் விஜய்யின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.