சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு பதவி விலகுவேன்: தமிழக காங்.தலைவர்..!
Top Tamil News April 04, 2026 09:48 AM

தமிழக காங்கிரஸ் தலைவரா செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் முடிந்த பிறகு என்னுடைய பணி முழுவதும் ஸ்ரீபெரும்புதூருக்கு மட்டும் தான். தேர்தல் முடிந்த பிறகு, காங்கிரஸ் தலைமையிடம் பேசி தொகுதி மற்றும் தமிழக வேலை மட்டும் செய்யப்போகிறேன். இரண்டு ஆண்டுகள் என்னை நம்பி ஒப்படைத்தனர். லோக்சபா தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற்றுத்தந்தோம் . இந்த தேர்தலிலும் 100 சதவீத வெற்றியை பெறுவோம்.ஒரு மனிதன் பதவியில் இருந்து விலகும்போது மனநிறைவோடு விலக வேண்டும். நான் மனநிறைவோடு விலகுகிறேன்.

எனக்கு எந்த அழுத்தமும் கிடையாது. எந்த பதவி கேட்டாலும் ராகுல் கொடுப்பார். என்னுடைய பணிகள் தான் காரணம். நான் என்னென் செய்தேன் என்பது தலைவர்களுக்கு தெரியும். மனநிறைவோடு செய்தேன்.24 மணி நேரமும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செலவிட உள்ளேன். மாநில தலைவராக இருந்த 2 ஆண்டுகளில் திட்டம் தீட்ட முடிந்தது. ஆனால், உறவுகளில் சிக்கல் ஏற்பட்டது. அதனை விலக்கிவிட்டு இங்கேயே அமர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பிள்ளையாக இருந்தேன்.

தமிழக மக்களின் பிள்ளையாக 2 ஆண்டுகள் இருந்தேன்.தேர்தலுக்கு பிறகு வேறு வேலை செய்ய உள்ளேன்.காங்கிரஸ் தேசிய கட்சி. 5 மாநில தேர்தல்களில் தலைவர்கள் பிரசாரத்தில் இருந்தனர். 2 நாள் கேரளாவிலும், ஒருநாள் அசாமிலும் பிரசாரத்தில் இருந்தனர். அதனால் நான்கு நாட்கள் தாமதமானது. நாங்கள் அறிவித்த பிறகு தான் பாஜ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. சரியான நேரதத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

நாளையும், நாளை மறுநாளும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.இவர் கடந்த 2024ம் ஆண்டு பிப்., முதல் தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.