சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்; ஓவர்டனின் அபார பந்துவீச்சு; டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த சி.எஸ்.கே..!
Seithipunal Tamil April 12, 2026 07:48 AM

2026 ஆம் ஆண்டுக்கான 19வது ஐபிஎல் தொடரின் 18 வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதன்படி, சென்னை- டில்லி அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 02 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் மூன்று சதங்களை பதிவு செய்துள்ள சஞ்சு சாம்சன் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 18 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் 15 பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இணைந்த சஞ்சு சாம்சன் – ஆயுஷ் மாத்ரே இணை அதிரடியாக ரன்கள் சேர்த்தது.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் மாத்ரேவும் அரைச்சதம் அடித்து அசத்தினார். இறுதியில், 52 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 102 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 14 பவுண்டரிகளும், 04 சிக்சர்களும் அடித்தார்.

36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த ஆயுஷ் மாத்ரே ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறிய நிலையில், சிவம் துபே 10 பந்துகளில் 1 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டமிழக்காமல் நிதானமாக ஆடிய சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்கள் சேர்க்க 20 ஓவர்களில் சென்னை அணி 212 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் அக்சர் படேல் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கினர். பவர் ப்ளேயில் அதிரடியாக தொடங்கிய டெல்லி அணியினரின் விக்கெட் அடுத்து அடுத்து சரியாய் தொடங்கியது.

ராகுல் 18 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து நிசாங்கா 41 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சமீர் ரிஸ்வி 06 ரன்களும், கேப்டன் அக்சர் படேல் 01 ரன்னும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். டேவிட் மில்லர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.  டெல்லி அணி 121 ரன்களுக்கு 05 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அதிரடி காட்டி அணிக்கு நம்பிக்கை கொடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி அணி 189 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் நான்கு போட்டிகளில் ஆடிய சென்னை அணி முதலாவது வெற்றியை பெற்றுள்ளது. அணியின் சார்ப்பாங்க ஜிம்மி ஒவ்ரடன் சிறப்பாக பந்து வீசி, 04 விக்கெட்டுகளையும், கம்போஜ் 03 விக்கெட்டுகளையும், கலீல், குர்ஜபணீத் சிங், நூர் ஆகியோர் தலா  ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். இன்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருதை சஞ்சு சாம்சன் வென்றார். 
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.