பொதுவாக இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் முதுகு வலி என்பது சர்வ சாதாரணமாகி விட்டது .பல இளைஞர்களும் இந்த கம்ப்யூட்டர் முன் நாள் முழுவதும் அமர்ந்து வேலை பார்ப்பதால் இந்த முதுகு வலியால் அவதி படுகின்றனர் இந்த முதுகு வலிக்கு என்ன செய்யலாம் என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1. சிலர் கூன் விழுந்து உட்காருவர் ,அதனால் எப்போதும் நாம் உட்காரும் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2.முதுகு வலி வராமலிருக்க உட்காரும் போது நேராகவும், குனியாமல் நிமிர்ந்து அமருங்கள் . வேலை பளுவால் நீங்கள் சற்று சாய்ந்து எசகு பிசகாக உட்கார கூடாது
3.இந்த சூழ்நிலைகளில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும்.
4.முதுகு வலி வராமலிருக்க அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை மாற்றி கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும்.
5.முதுகு வலி வராமலிருக்க வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேரகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம்.
6.கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர் மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காரலாம்.
7.முதுகு வலி வராமலிருக்க இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உயர்த்துங்கள்.
8.முதுகு வலி வராமலிருக்க கால்ஷியம் எலும்பின் வலிமைக்கு முக்கியமானதாகும்.
9.. முதுகு வலி வராமலிருக்க வைட்டமின் ஏ, வைட்டமின், சி, கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய ஆற்றல் பெற்றதாகும்