பப்பாளிக்காயைச் சமைத்து உண்டுவந்தால் எது குறையும் தெரியுமா ?
Top Tamil News April 12, 2026 08:48 AM

பொதுவாக உடல் எடை குறைய பலர் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர் .சிலர் டாக்டரிடமும் ,சிலர் ஜிம்முக்கும் செல்கின்றனர் ,ஆனால் இந்த பதிவில் சில இயற்கை வழியில் எப்படி உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக காட்சி தரலாம் என்று பார்ப்போம் 

1.சிலர் சோம்பு நீர் குடிப்பர் .இந்த சோம்பு கலந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலில் உள்ள ஊளைச் சதை குறைந்து விடும் . 
2.சிலர் சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்த்து வருவர் .இப்படி சேர்த்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் குறையும்.
3. சிலர் பப்பாளிக்காயைச் சமைத்து உண்டுவருவர் .இப்படி உண்டு  வந்தால் உடல் மெலியும். 
4.இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து குடித்து வந்தாலும் உடல் மெலிந்து ஸ்லிம்மாக இருக்கலாம் . 
5.சிலர் அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் போன்றவற்றை பாலில் காய்ச்சி குடித்து வருவர் .இப்படி குடித்து வந்தால் உடல் எடை குறையும்
6. சிலர் சுரைக்காயை சாப்பிடுவர் ,இதை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். 
7.வெறும் தேநீர் குடிபதற்கு பதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்த தேநீரை காலையில் குடிக்க தொப்பை குறையும் 
8. வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு  தொடர்ந்து குடித்து வந்தாலும் உடலில் சதை போடுவதைத் தடுக்கலாம். 
9.மேலும் காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் உடலில் உள்ள  கொழுப்பு கரையும், 
10.இந்த வாக்கிங் மூலம் உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.