பாமக நிறுவனர் ராமதாசுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி..!
Top Tamil News April 13, 2026 08:48 AM

பாமக நிறுவனரான ராமதாஸ், சசிகலா உடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்கிறார். அன்புமணி தரப்புக்கு எதிராக வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளார். நேற்று அவர் தனது ஆதரவு வேட்பாளர்களுக்கு பிரசாரத்தை துவக்கினார்.

சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அருளை ஆதரித்து, பள்ளப்பட்டி பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் ராமதாஸ் பேசினார். பேசி முடித்ததும் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.உடனடியாக கட்சி நிர்வாகிகள், அவரை வாகனத்தில் ஏறறி மருத்துவமனையில் சேர்த்துளு்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.