தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார ஸ்டைலை கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் முதல்வராகவும், தற்போதைய முதல்வர் வேட்பாளராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, மூன்றாம் கட்ட பேச்சாளர் போன்று தரம் தாழ்ந்து பேசுவது தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
”ஈபிஎஸ் அண்ணன் அரசியல் மாண்பு மற்றும் கண்ணியத்துடன் பிரசாரத்தில் பேச வேண்டும்” என்று கேட்டுக்கொண்ட பிரேமலதா, மற்றவர்களை விமர்சிப்பதை விட, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்காக என்ன மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்பதைப் பற்றி எடப்பாடி பேச வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஈபிஎஸ்-ஐ ஒரு ‘மூன்றாம் கட்ட பேச்சாளர்’ என பிரேமலதா குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.