தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தனது கான்வாயை நிறுத்தச் சொல்லி அரசுப் பேருந்தில் ஏறிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “தம்பி வண்டிய நிறுத்துப்பா” என்று சாதாரணமாக ஒரு பயணியைப் போல முதலமைச்சர் கேட்டதும், பேருந்தில் இருந்த மக்கள் அனைவரும் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர். முதல்வர் திடீரென பேருந்திற்குள் வந்ததை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் மற்றும் நடத்துநர் பெரும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
பேருந்தில் ஏறிய முதலமைச்சர், அங்கிருந்த பயணிகளிடம் நலம் விசாரித்ததுடன், குறிப்பாகப் பெண்களுக்கு விடுக்கப்பட்ட இலவச பேருந்து பயணத் திட்டம் சரியாகச் செயல்படுகிறதா என்றும் கேட்டறிந்தார். பேருந்து வசதிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துநர்களின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் நேடியாகக் குறைகளைக் கேட்டறிந்த காணொளி தற்போது ‘X’ தளத்தில் வைரலாகி வருகிறது. முதலமைச்சரின் இந்த எதார்த்தமான நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.