இருமுகன் பட இயக்குநருடன் விக்ரம் இணையும் புதிய படம்.. அப்டேட் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு!
TV9 Tamil News April 17, 2026 12:48 AM

நடிகர் சியான் விக்ரம் (Chiyaan Vikram) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 22025ம் ஆண்டில் வீர தீர சூரன் 2 என்ற படமானது வெளியாகியிருந்தது. இதை இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் இயக்கியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவர் அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமார் (Bodi K Rajkumar) என்ற இயக்குநருடன் தனது 63வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்காகனது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சியான் விக்ரம் அதிரடி கேங்ஸ்டராக நடித்துவரும் நிலையில், சிறப்பாக தயாராகிவருகிறது. இதில் நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) கதாநாயகியாக நடித்துவருகிறார் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இவர் பிரபல இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் புது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் இப்படத்தின் அறிவிப்பு வரும் 2026 ஏப்ரல் 17ம் தேதியில் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க: டோவினோ தாமஸ் – கயாடு லோஹரின் ‘பள்ளிச்சட்டம்பி’ பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

இருமுகன் பட இயக்குநருடன் மீண்டும் இணையும் சியான் விக்ரம்:

கடந்த 2016ம் ஆண்டில் வெளியான படம் இருமுகன். இப்படத்தில் நடிகர் விக்ரம் இரு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இதில் விக்ரமிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில், ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது.

இதையும் படிங்க: சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள் வீடியோ

அந்த வகையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் புது படத்தில் இணைந்துள்ளாராம். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் 2026 ஏப்ரல் 17ம் தேதில் மாலை 6:03 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

விக்ரமுடன் கைகோர்க்கும் புத்திய படம் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு:

Our next.
24 hours to go.

FIRST FL🔥ME – Will be lit at 6.03PM tomorrow. pic.twitter.com/YrdquX460G

— Sathya Jyothi Films (@SathyaJyothi)

இந்த படமும் அதிரடி கேங்ஸ்டர் கதைக்களத்தில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படமானது நெருப்பை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அந்த விதத்தில் இப்படம் சியான்64 என அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.