கைக்குழந்தையுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தாய்
Top Tamil News April 17, 2026 01:48 AM

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் தாய் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை ஆபத்தான நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜராஜன் (32). இவருக்கும் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடங்கள் முன் திருமணம் நடந்துள்ளது,இத்தம்பதிகளுக்கு மகிஷா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்து வருகிறது. பவித்ராவுக்கும் அவருடைய மாமியாருக்கும் இடையே அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரா தனது கைக்குழந்தையுடன் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு குழந்தையுடன்  பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தற்கொலை செய்து கொண்ட பவித்ரா உடலை ரயில்வே போலீசார்  உடலை மீட்டும் படுகாயமடைந்த குழந்தையை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பவித்ரா உடல் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே
ஓடும்  ரயில் முன்பு கைக்குழந்தையுடன்   தாய் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.