தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள்... பிரச்சாரத்தில் உளறிய அண்ணாமலை
Top Tamil News April 17, 2026 01:48 AM

தேர்தல் நாட்களை மறந்த அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் பத்து நாட்கள் இருப்பதாக கூறி உளறி தள்ளிய அண்ணாமலையால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் உதயகுமாரை ஆதரித்து கந்தர்வகோட்டையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை ஆற்றி தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்பொழுது பேசிய அவர் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது, சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் இன்னும் பத்து நாள்தாங்க பத்து நாள் ஏப்ரல் 23ஆம் தேதி மாற்றத்திற்க்கா வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் நாட்களை மறந்து உளரிதள்ளிய அண்ணாமலையால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் பெண்களுக்கு கொடுக்கக்கூடிய உரிமை தொகை ஆயிரத்தில் இருந்து இரண்டியிரமாக வழங்கப்படும். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்று தெரிவித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.