தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் விஜயபிரபாகரனுக்காகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், “விஜயபிரபாகரன் சென்னையில் இருப்பார், அவரைத் தொகுதியில் பார்க்க முடியாது என்று சிலர் வதந்திகளைப் பரப்பி உங்களைக் குழப்புவார்கள், அதை நம்பாதீர்கள்; அவர் உங்களுக்காக விருதுநகரிலேயே வீடு எடுத்துத் தங்கிச் சேவை செய்யப் போகிறார்” என்று அதிரடியாக அறிவித்தார்.
விஜயகாந்த் விருதுநகர் மண்ணின் மைந்தர் என்பதை நினைவு கூர்ந்த பிரேமலதா, தனது மகனை இந்தத் தொகுதியின் பிள்ளையாக மக்கள் ஏற்றுக்கொண்டு வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
“>
தொகுதி மக்களுடனேயே தங்கிப் பணியாற்ற விஜயபிரபாகரன் எடுத்துள்ள இந்த முடிவு, உள்ளூர் வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.