பழனியில் நடைபெற்ற திமுக கூட்டணி இளைஞர் கலை விழாவில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ், தற்போதைய அரசியல் சூழல் குறித்து மிகக் காரசாரமாகப் பேசினார். “நடிகருக்காக விசில் அடிக்கலாம், ஆனால் அதற்காக நாட்டைத் தூக்கிக் கொடுத்துவிட முடியாது” என்று அவர் கூறியது, சமீபத்தில் அரசியலுக்கு வந்த நடிகர்களை மறைமுகமாகச் சாடுவது போல அமைந்தது. மேலும், இந்தத் தேர்தல் வெறும் கட்சிகளுக்கு இடையிலான மோதல் அல்ல, இது நாட்டின் ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் நடக்கும் போராட்டம் என அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்கு எந்த மாதிரியான நிர்வாகம் தேவை என்பதை இப்போதே முடிவு செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இது திமுக, அதிமுக அல்லது தவெக-வுக்கான தேர்தல் கிடையாது என்று அவர் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பிரகாஷ்ராஜின் இந்த அனல் பறக்கும் பேச்சு தற்போது இணையதளங்களில் செம ரீச் கொடுத்து வருகிறது.