சேலம் சங்ககிரி தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவினரை டீ கடை மேட்டரை வைத்து செம்மையாக கலாய்த்துள்ளார். “திமுகவினர் டீ குடித்தால் காசு தரமாட்டார்கள், ஆனால் அதிமுகவினர் ஒரு டீ குடித்தால் இரண்டு டீக்கு காசு கொடுப்பார்கள்” என அவர் பேசியது அங்கிருந்தவர்களிடையே பலத்த சிரிப்பையும் கைதட்டலையும் பெற்றது. திமுகவினரின் அணுகுமுறைக்கும் அதிமுகவினரின் பண்பிற்கும் உள்ள வித்தியாசத்தை இந்த ஒரு உதாரணத்தின் மூலம் அவர் நச்-என்று விளக்கியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சாதாரண டீ கடை முதல் பெரிய இடங்கள் வரை திமுகவினரின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்தார். ஈபிஎஸ்-ஸின் இந்த கலகலப்பான அதே சமயம் காரசாரமான பேச்சு இப்போது வாட்ஸ்அப் மற்றும் சோசியல் மீடியாக்களில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. தேர்தல் நேரத்தில் டீ கடை பாலிடிக்ஸை ஈபிஎஸ் கையில் எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.