ஈரோட்டில் தேர்தல் பரப்புரை செய்த அதிமுக (தவெக என குறிப்பிடப்பட்டுள்ளது) வேட்பாளர் செங்கோட்டையன், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடந்த ஆட்சி மாற்ற ரகசியங்களை உடைத்துப் பேசியது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. “அதிமுகவில் ஜெயலலிதாவுக்குப் பிறகு நான்தான் முதலமைச்சராகி இருக்க வேண்டும், ஆனால் நான் ஏமாந்துவிட்டேன்” என அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளரான பின்னணியில் ‘பெட்டி’ விவகாரம் இருந்ததாகவும், அவர் சசிகலா காலில் மலைப்பாம்பு போல விழுந்து பதவியைப் பிடித்ததாகவும் செங்கோட்டையன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சி உடையாமல் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அன்று தான் விட்டுக்கொடுத்ததாகக் குறிப்பிட்டார். சசிகலா முதலில் தன்னிடம்தான் கேட்டார் என்றும், ஆனால் எடப்பாடி பழனிசாமி கையில் வசதி இருந்ததால் அவர் முதல்வர் ஆனார் என்றும் செங்கோட்டையன் பேசியது அதிமுக தொண்டர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் செங்கோட்டையன் கிளப்பியுள்ள இந்த விவகாரம் எடப்பாடி தரப்பை கடும் அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது.