“மகளிர் இடஒதுக்கீடு வெறும் கண்துடைப்பா?” பின்னணியில் இருக்கும் பிளான்…. அமித் ஷாவுக்கு மம்தா பானர்ஜி கொடுத்த 'வார்னிங்'….!!
SeithiSolai Tamil April 17, 2026 06:48 PM

தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசு மிகப்பெரிய சதியில் ஈடுபட்டுள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தாமல் காலம் கடத்திய அரசு, இப்போது அதன் மறைவில் வாக்காளர் பட்டியலில் உள்ள பல பெயர்களை நீக்கி, தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) அமல்படுத்தத் துடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது.

பாஜகவின் இந்தத் திட்டம் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகவும், வாக்காளர்களைக் குறைப்பதற்காகவும் போடப்பட்ட ஒரு ரகசிய வியூகம் என்று மம்தா சாடியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு என்பது வெறும் சீரமைப்பு மட்டுமல்ல, அது ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால் என அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார். மம்தாவின் இந்தப் பேச்சு தேசிய அளவில் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.