“குடும்பத்தை பிரித்து சின்னாபின்னமாக்கியது இவர்தான்”- ராமதாஸ் பரபரப்பு பேட்டி
Top Tamil News April 17, 2026 08:48 PM

அன்புமணியின் குடும்பத்தினர் நடிப்பு திறனிலும் கூசாமல் பொய் பேசுவதில் திறன் மிக்கவர்கள். குடும்பத்தை சிண்னாபின்னமாக்கி வேறருத்து, அதில் செளமியா அன்புமணின் குளிர் காய்கிறார் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “பல்வேறு பிரச்சனைகளை ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பின் போது விவாதித்து கலந்துரையாடல் செய்திருக்கிறேன், இந்த சந்திப்பு ஒரு சோகமான சந்திப்பு, கீழ் சிவிரி என்ற சிறிய கிராமத்திலிருந்து சென்று மருத்துவம் படித்து மருத்துவ தொழில் செய்த நான் சாணி மூட்டை தூக்கி மருத்துவம் படித்தேன், அது ஒரு சோகமான கதை. அந்த கதையை கேட்டால் அழுகை வரும். அதன் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியை 1989 இல்  உருவாக்கினேன்... கட்சி ஆரம்பிக்கும் போது நான் செய்த சத்தியம் அரசியலுக்கு வருவேன். எந்த பதவிக்கும் செல்ல மாட்டேன், என் குடும்பத்தை சார்ந்தவர்களும் செல்ல மாட்டார்கள் என கிளை சத்தியம் செய்தேன்.
 

சத்தியத்தை மீறி அன்புமணிக்கு 35 வயதில் சின்ன வயதில் மத்திய அமைச்சராக்கியது நான் தான். ராஜ்யசபா உறுப்பினராக இரண்டு முறை இருந்தார். பாமகவை கைபற்றி விட வேண்டும் என்ற எண்ணம், கட்சியை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் அன்புமணிக்கு இருந்தது. விமானத்தில் செல்லும் போது கட்சியை நான் பார்த்து கொள்கிறேன் என அன்புமணி கூறியபோது இரண்டு சொட்டு கண்ணீர் விட்டேன். கட்சியின் தலைவர் பதவியை அன்புமணி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதால் அந்த தலைவர் பதவியை நானே எடுத்து கொண்டேன். எண்ணியிலடங்காத கோமாளி வேஷம் போட்டு என்னை பற்றி கூற ஒரு பொய் கூட்டம் உள்ளது. எண்ணிலடங்காத பொய் பேசும் பழக்கம் அன்புமணி அவரது குடும்பத்தினருக்கும் உண்டு. குடும்பத்தை பிரித்தது செளமியா அன்புமணி. பணத்தை கொடுத்து பொய்யர்கள் கூட்டத்திற்கு ஒவ்வொருவராக அழைத்து செல்லும் கேவலமான தொழிலை அவர் செய்து வருகிறார். குடும்பத்தை சிண்னாபின்னமாக்கி வேறருத்து அதில் குளிர் காய்கிறார். இரண்டு முறை மருத்துவமனையில் இருந்த போது கட்சியினர் அழுதார்கள், நலம் பெற வேண்டுமென வேண்டினர். ஆனால் பொய்யர் (அன்புமணி) குடும்பத்தை சார்ந்த யாரும் தன்னை வந்து பார்க்கவில்லை, போனில் கூட பேசவில்லை. வயசாகி விட்டதாக கூறுகிறார்கள்.


நான் நீச்சலிடிச்சி காமித்தேன், தினமும் நடக்கிறேன், நீச்சலடிக்கிறேன், நூறு உடற்பயிற்சி செய்கிறேன், உடல் நலம் சரியில்லை என பொய்யர்கள் கூட்டம் தனக்கு வயதாகி விட்டது என தெரிவிக்கிறார்கள், பொய்யர்கள் என்னை பற்றியும், ஜிகே மணியை பற்றியும் பேசுகிறார்கள். அன்புமணியின் குடும்பத்தினர் நடிப்பு திறனிலும் கூசாமல் பொய் பேசுவதில் திறன் மிக்கவர்கள். மூட்டை மூட்டையாக அன்புமணி பொய் அவிழ்த்து விடுகிறார். பேத்திகள் நடிப்பார்கள், பொய் பேசுவார்கள். பாமக கட்சியை பிடுங்க உச்சநீதிமன்றம் வரை ஏறி இறங்கி நீதிமன்றங்களில் இருப்பவர்களிடம் காசினை கொடுத்து பொய் பொய்யாக பேசி சின்னத்தையும் கட்சியையும் அபகரிக்கும் வழக்குகள் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலில் சிலிண்டர் சின்னத்திற்கும் கூட்டணி சின்னத்திற்கும் வாக்களிக்க வேண்டும். பாமக அபகரித்துவிட்டார்கள், என் இறப்பு எப்போ வரும் என காத்து கொண்டிருக்கிற கூட்டத்தில் பிள்ளையாக கூட இருக்கலாம். கட்சியை அபகரிக்க குறுக்கு வழியில் என்னமோ செய்தார்கள், ஜிகே மணியிடம் இருந்து திட்டமிட்டு கட்சியின் தலைவர் பதவியை பெற்றார்கள், நான் தான் அன்புமணிக்கு தலைவராக இருக்கும் தகுதி இல்லை” என்றார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.