கோலிவுட் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவந்தவர் குஷ்பு (Khushbu). இவர் நடிகரும், இயக்குநருமான சுந்தர் சி-யின் (Sundar C) மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர், தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் பிரபு (Prabhu) போன்ற நடிகர்களுடன் ஜோடியாக படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவருக்கு தமிழில் சிறப்பான ஜோடியாக அமைந்தது நடிகர் சரத்குமார் (sarathkumar) என்று கூறலாம். அந்த வகையில் தனது திருமணத்திற்கு பிறகு படங்களில் கதாநாயகியாக நடிப்பதை குஷ்பு குறைத்துக்கொண்டார். அதன் பிறகு படங்களில் நடிகர்களின் அக்கா, அம்மா மற்றும் முக்கியமான வேடங்களில் இவர் நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகை குஷ்பு, சுந்தர் சி இயக்கும் படங்களில் சிறப்பு வேடம் மற்றும் சிறப்பு நடனமாடிவருகிறார். மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2) படத்தில் இவர் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த குஷ்பு, தர்மத்தின் தலைவன் (Dharmathin Thalaivan) பட ஷூட்டிங்கின்போது, ரஜினிகாந்துடன் நடந்த நகைச்சுவை சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: எனது முதல் இந்தி படத்தில் பட்ட கஷ்டம் – நடிகர் தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
ரஜினிகாந்துடன் நடந்த நகைச்சுவை சம்பவம் குறித்து பகிர்ந்த குஷ்பு:
View this post on Instagram
A post shared by Kushboo Sundar (@khushsundar)
அந்த நேர்காணலில் குஷ்பு பேசுகையில், “தர்மத்தின் தலைவன் பட முதல் நாள் ஷூட்டிங்கில், பலரும் “வாடா போடா” என பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அதை மிகவும் மரியாதையான வார்த்தை என நினைத்துக்கொண்டேன். அந்த சமையத்தில் ரஜினிகாந்த் சார் என்னிடம், “போயிடு வரேன்” என தமிழில் சொன்னாரு. உடனே நான் அவரை பார்த்து, “போடானு” சொல்லிட்டேன். அப்படியே மொத்த ஷூட்டிங் யூனிட்டும் சிலையாக நின்றார்கள். அப்படியே எல்லாருமே என்னை திரும்பி பார்த்தார்கள், ரஜினி சாரும் ஷாக்காகி நின்றுகொண்டிருந்தார்.
இதையும் படிங்க: இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுதா?.. தனது திருமணத்திற்காக ஒரு ஷோவையே நடத்திய நடிகர் இவர்!
உடனே நானும் ஏன் எல்லாருமே என்னை பார்க்கிறார்கள், நான் பாய் தானே சொன்னேன் என கூறினேன். உடனே பிரபு சார் என்னிடம் வந்து, “ரஜினி சாரை அப்படி எல்லாம் சொல்லக் கூடாது” என சொன்னார். உடனே நான், “யூனிட்டில் எல்லாருமே அப்படித்தானே பேசிக்கொள்கிறார்கள்” என சொன்னே. அவர்களை சொல்லலாம், ஆனால் ரஜினிகாந்த் சாரை அப்படி சொல்ல கூடாது என சொன்னாரு . உடனே ரஜினிகாந்த் சாரும், உடனை என்னை தட்டிக்கொடுத்துவிட்டு, “தமிழ் தெரியாது என சொன்னாரு” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.