தமிழ் சினிமாவில் இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் இயக்குநர் அட்லி. தொடர்ந்து சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த அட்லி பிறகு தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயகுநர் அட்லி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியான படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வந்த இயக்குநர் அட்லி அடுத்து இந்தி சினிமாவில் இயக்குநராக என்ட்ரி கொடுத்தார்.
அதன்படி இந்தி சினிமாவில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் நடித்து இருந்தார். இந்தப் படத்தினைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ராக்கா என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
பெண் குழந்தைக்கு தந்தையானார் இயக்குநர் அட்லி:தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்பான அப்டேட்களும் செய்திகளும் வெளியாகி வரும் நிலையில் அவ்வபோது அவரது சொன்ந்த வாழ்க்கை சம்பந்தமான செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இயக்குநர் அட்லி மற்றும் பிரியா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை பெண் என்பதை மிகவும் மகிழ்ச்சியாக தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இவர்களுக்கு முதலாவதாக ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் அட்லி மற்றும் பிரியா தம்பதிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்ந்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read… Vignesh Raja: கர படத்தை பார்த்து தனுஷ் சார் சொன்னது – இயக்குநர் விக்னேஷ் ராஜா பேச்சு!
இயக்குநர் அட்லி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:Feeling blessed 💞💞💞💞💞@priyaatlee pic.twitter.com/tQgPKbQZbi
— atlee (@Atlee_dir)
Also Read… Mysaa: மைசா படத்திற்காக தீவிர சண்டை பயிற்சியில் ராஷ்மிகா மந்தனா – வைரலாகும் பதிவு!