2 நாள் வெயிட் பண்ணுங்க...மே 4-ல் தேமுதிக-வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது...! - நம்பிக்கையில் பிரேமலதா விஜயகாந்த்
Seithipunal Tamil May 02, 2026 12:48 AM

உலக உழைப்பாளர்களின் பெருமை நாளான மே தினம் முன்னிட்டு, சென்னையில் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் உரையாற்றுகையில், “கருத்துக்கணிப்புகளை நான் பார்க்கும் விதம் வேறுபட்டது.

ஆக்கப்பொறுத்தவர்கள் இன்னும் சிறிது காலம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அனைத்தும் நிறைவடைந்து விட்டது; இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது.

மே 4ஆம் தேதி வெற்றியின் இனிய செய்தி வெளிப்படும்; அனைவருக்கும் சாதகமான மாற்றங்கள் உருவாகும்” என்று தெரிவித்தார்.மேலும், “எங்கள் மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணி கணிசமான ஆதரவை பெற்று அமோக வெற்றியைப் பதிவு செய்யும்.

மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்குவர். நாங்கள் தேமுதிக சார்பில் 10 பேர் போட்டியிட்டுள்ளோம்; கேப்டனின் ஆசீர்வாதத்துடன் அந்த 10 பேரும் சட்டசபை வாசலை அடைவார்கள்” என நம்பிக்கை வெளிப்படுத்தினார்.

அத்துடன், “எங்களைப் புகழ்ந்தாலும் தேமுதிக தான், விமர்சித்தாலும் தேமுதிக தான். பழுத்த மரத்திற்கே கல்லடி வரும் என்பதுபோல எழும் விமர்சனங்களுக்கு மே 4ஆம் தேதி தகுந்த பதில் வழங்குவேன்” என அவர் உறுதியாக தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.