காலையில் மூளை சுறுசுறுப்பாய் இருக்க இந்த உணவுகள் உதவும்
Top Tamil News May 02, 2026 08:48 AM

பொதுவாக இன்றைய அவசர உலகில் பலர் ,ஆபீஸ் செல்லும் பரபரப்பில் காலை உணவை சாப்பிடாமல் தவிர்க்கின்றனர் .இதனால் உடலிலும் மூளையிலும் சோர்வு உண்டாகி வேலையில் முழு கவனம் செலுத்த முடியாமல் போகிறது .எனவே காலை வேலையில் மூளை சுறுசுறுப்பாக இயங்க எந்த மாதிரி உணவுகளை சேர்த்து கொள்ளலாம் என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம் 

1.பொதுவாக காலையில் மூன்று வகையான உணவுகள் இடம் பெற்றால் மூளையின் ஆற்றல் நன்றாக இருக்கும் .அந்த உணவுகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது 
2. முழுத்தானிய உணவால் செய்யப்பட்ட சாண்ட்விச், பாலாடைக்கட்டி, ஆப்பிள், காலையில் சாப்பிடலாம் 
3. மேலும் தக்காளித் துண்டுகள், கோதுமை சாப்பாத்தி, காய்கறி அவியல், தயிர் ஒரு கோப்பை காலையில் உண்ணலாம் 
4. அடுத்து காலையில் மூளை சுறுசுறுப்பாய் இருக்க கோதுமை ரவை, பால், பழத்துண்டுகள் உண்ணலாம் 
5.காலையில் சாப்பிட பழங்களைத் தெரிவு செய்யும்போது மட்டும் விட்டமின் சி தாராளமாக உள்ள பழங்களையே சாப்பிடவும் 
6.ஏனென்றால், விட்டமின் சி இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் விரைவாக நடந்து மூளைக்கும் ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும்.
7.ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்பிட பணமில்லை என்றால் பரவாயில்லை 
8.தக்காளிப் பழம் ஒன்றை அவசியம் சாப்பிடவும்.இதில் விட்டமின் சி தாராளமாக இருக்கிறது.
.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.