சரிவரப் பசி எடுக்காத குழந்தைகளுக்கு பசியெடுக்க வைக்கும் இப்பழம் .
Top Tamil News May 02, 2026 08:48 AM

பொதுவாக பழங்களில் நம் உடலுக்கும் குடலுக்கும் நன்மை செய்யும் சத்துக்கள் நிறைய உள்ளது .அதனால்த்தான் பெரும்பாலான மருத்துவர்கள் நம்மை இரவில் பழம் மட்டும் சாப்பிட சொல்கின்றனர் .ஆனால் பலர் துரித உணவுகளையும் .பிரியாணி போன்ற ஹெவியான ,செரிமானக்கோளாறுகளை உண்டாக்கும் உணவுகளை சாப்பிட்டு விட்டு அவஸ்த்தை படுகிறோம் .எனவே இந்த அத்தி பழம் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மை பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம் 

1.அத்தி பழம் சாப்பிடுவது சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் 
2.அத்தி  பழத்தில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் போன்ற விட்டமின்கள் உள்ளன. 
3.அத்திப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து , எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது.
4.பெண்கள் தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்துக் காலை எழுந்தவுடன் நீரைக் குடித்து பழத்தை மென்று சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டு 
5.பெண்கள் தினம் அத்திப்பழத்தை சாப்பிட வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். 
6.பெண்கள் தினம் அத்திப்பழத்தை சாப்பிட கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும்.
7.கர்ப்பக் காலங்களில்  பெண்கள் தினம் ஊற வைத்த அத்திப்பழம் சாப்பிடலாம் .இதனால்  மலச்சிக்கல் நீங்குவதுடன், உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாகப் பெறமுடியும்.
8.சில குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடாது .இப்படி சரிவரப் பசி எடுக்காத குழந்தைகளுக்கு அத்திப்பழம் நல்லது. 
9.சில குழந்தைகளுக்கு இருமல் இருக்கும் ,இப்படி  உள்ள குழந்தைகளுக்கும் அத்திப்பழம் கொடுக்கலாம். 
10. தினம் அத்திப்பழத்தை சாப்பிட ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் 
11. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுப்பதோடல்லாமல்  நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.