பொதுவாக நம் தமிழ் நாட்டில் ஒரு கோடி பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக ஒரு அதிர்ச்சி புள்ளி விவரம் கூறுகிறது .இந்த புள்ளி விவரம் சமீபத்த்தில் எடுக்கப்பட்டது .இப்படி நம் தமிழகத்தில் இந்த நோய் அதிகரிக்க நமது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணம் .இந்த சுகருக்கு செலவில்லாத ஒரு சிகிச்சை முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். பின்வரும் இயற்கை வைத்திய முறைகளை முயற்சி செய்து பாருங்களேன்:
2.முதலில் வரக்கொத்தமல்லி அரை கிலோ அளவிற்கு எடுத்து கொள்ளவும்
3.அடுத்து வெந்தயம் கால் கிலோ அளவிற்கு எடுத்து கொள்ளவும்
4.பின்னர் தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்
5.அதன் பின்பு தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
6.பின்னர் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து விடவும்
7.அதன் பின்னர் அதை ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும்.
8.பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்பிட்டு வரவும்
9.இப்படி சாப்பிட்டு வந்தால் சுகர் அளவு நாளடைவில் குறைவதை காண்பீர்கள்