தேசியக் கல்விக் கொள்கையை (NEP 2020) அடிப்படையாகக் கொண்ட மத்திய அரசின் ‘பி.எம் ஸ்ரீ’ (PM SHRI) திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகத் தமிழகத் தலைமைச் செயலாளருக்கு மத்தியக் கல்வி அமைச்சகம் மீண்டும் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய இத்திட்டத்தை முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடுமையாக எதிர்த்து வந்ததால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழான சுமார் 2,152 கோடி ரூபாய் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், எந்தவிதத் திருத்தமும் இன்றி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடனடியாகக் கையெழுத்திடுமாறு வலியுறுத்தியுள்ள மத்திய அரசு, தமிழகத்தில் தற்போது புதிய அரசு அமையவுள்ள சூழலைப் பயன்படுத்தி, முட்டுக்கட்டையாக இருந்த இத்திட்டத்தை மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இனி முழுமையாக அமல்படுத்தும் எனப் பலத்த நம்பிக்கை தெரிவித்துள்ளது.