“ஜஸ்ட் ஒரு ஓட்டுதான்.. ஆனா சீட்டே போயிடுச்சு.. தவெக-விடம் தோற்ற அமைச்சர்.. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ந்து சொன்ன அந்த ஒரு விஷயம்.. ஜனநாயகத்தின் பவர் இதுதான்..!!”
SeithiSolai Tamil May 07, 2026 08:48 AM

திருப்பத்தூர் தொகுதி தேர்தல் முடிவில் அமைச்சர் பெரியகருப்பன், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த புகைப்படத்தை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படம் நாட்டின் ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளுக்குக் காட்டப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் தங்களிடம் உள்ள ஒரு வாக்கின் வலிமை எவ்வளவு பெரியது என்பதை ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கொள்ளும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

“>

 

ஒரு ஓட்டுதானே என்று அசட்டையாக இருக்காமல், ஜனநாயகத்தில் ஒவ்வொரு தனிமனிதனின் வாக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையில் அவரது இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.