“விஜய்க்கு அட்வைஸ் பண்ண ஸ்டாலின்” 2500 ரூபா கஷ்டம்…. 1000 ரூபாயாவது கொடுங்க…. பரபரப்பு பேட்டி….!!
SeithiSolai Tamil May 07, 2026 12:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அரசு அமைய உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், தனது தலைமையிலான அரசு கொண்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற மிக முக்கியமான மக்கள் நலத்திட்டங்களை அடுத்து வரும் புதிய அரசும் கட்டாயம் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, தமிழகப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இந்தத் திட்டங்கள் நிறுத்தப்படக் கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். அதே சமயம், தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தற்போதைய நிதி நிலைமையில் இவ்வளவு பெரிய தொகையை வழங்குவது மிகவும் கடினமான காரியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ரூ.2,500 கொடுப்பது இருக்கட்டும், முதலில் தற்போது நடைமுறையில் உள்ள ரூ.1,000 திட்டத்தையாவது புதிய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஸ்டாலின் அவர்களின் இந்த யதார்த்தமான பேச்சு, சமூக வலைத்தளங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ளதுடன், தவெக-வின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்கிற எதிர்பார்ப்பையும் மக்களிடையே அதிகரித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.