“இது ஸ்மார்ட் மீட்டரா இல்ல கொள்ளை மீட்டரா?” எரியாத லைட்டுக்கு எகிறும் ரீடிங்…. வீதியில் இறங்கிய மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!
SeithiSolai Tamil May 07, 2026 12:48 PM

மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிட கொண்டு வரப்பட்ட ஸ்மார்ட் மீட்டர்கள், இப்போது பொதுமக்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியான ஒரு வீடியோவில், மின்சாரம் இல்லாத நேரத்திலும் ஸ்மார்ட் மீட்டரில் ரீடிங் ஓடிக்கொண்டிருப்பதை மக்கள் ஆதாரத்துடன் காட்டியுள்ளனர். “பத்தி குல் மீட்டர் சாலு” (வெளிச்சமே இல்லை ஆனால் மீட்டர் ஓடுகிறது) என்கிற பழமொழிக்கு ஏற்ப நடக்கும் இந்தச் சம்பவத்தைக் கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள், ஸ்மார்ட் மீட்டர்களைக் கையில் பிடித்துக் கொண்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த ஸ்மார்ட் மீட்டர் முறைக்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், இந்த வீடியோ காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மீட்டர் ரீடிங்கில் நடக்கும் இத்தகைய குளறுபடிகளால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தேவையற்ற கூடுதல் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறா அல்லது திட்டமிட்ட மோசடியா என மக்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த விவகாரம் மின்சார வாரியத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.