ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது.!? விஜய் - ஆளுநர் சந்திப்பில் திடீர் ட்விஸ்ட்-லோக் பவனில் நடந்தது என்ன.?
கு. அஜ்மல்கான் May 07, 2026 03:14 PM

ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும் தவெக

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் 108 தொகுதிகளை வென்ற தனிப்பெரும் கட்சியாக தவெக திகழ்ந்து வருகிறது. ஆனால் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறது. இதனையடுத்து திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தங்கள் அணியில் இணைக்க தவெக காய் நகர்த்தி வருகிறது.

ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்

அந்த வகையில் திமுக கூட்டணியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி 5 எம்எல்ஏக்களோடு தவெகவிற்கு ஆதரவை தெரிவித்தது. இருந்த போதும் 118 இடங்கள் தேவை என்ற நிலையில் 113 மட்டுமே தவெகவிற்கு கிடைத்து இருந்தது. இதனையடுத்து தங்களை ஆட்சி அமைக்க அழைக்கும் படி தவெக தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநரிடம் நேரில் சென்று அனுமதி கேட்டிருந்தார். ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால் ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இதனையடுத்து பெரும்பான்மை தொடர்பாக சில சந்தேகங்களை ஆளுநர் கேட்டுள்ளார். இதனையடுத்து இன்று காலை மீண்டும் ஆளுநரை விஜய் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். மேலிம் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகினது.

கேள்வி எழுப்பிய ஆளுநர்

அப்போது ஆளுநர் 112 பேரை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு எங்கே எனவும், ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை எப்படி காட்டுவீர்கள் எனவும் அடுத்தடுத்து தனத் சந்தேகங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து விஜய்யின் பதில்கள் ஆளுநருக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் ஆட்சி அமைக்க தற்போது அழைக்க வாய்ப்பு இல்லையென தகவல் வெளியாகியுள்ளது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.