Breaking: மாணவர்களே ரெடியா…? தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
SeithiSolai Tamil May 07, 2026 10:48 PM

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை காலை திட்டமிட்டபடி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் புதிய அரச அமைப்பதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் தேர்வு முடிவுகள் வெளிய ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தைகள் ஆணையம் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவர தாமதமானால் அது மாணவர்களின் கல்லூரி சேர்க்கையை பாதிக்கும் என்பதால் உடனடியாக முடிவுகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாளை திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.