தமிழக அரசியலில் அடுத்த சில தினங்களுக்குப் பல அதிரடி திருப்பங்கள் காத்திருப்பதை உறுதி செய்யும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குப் பிறப்பித்துள்ள “ஸ்டிரிிக்ட்” உத்தரவு அண்ணா அறிவாலயத்தைப் பரபரப்பாக்கியுள்ளது.
தமிழகத்தில் மெஜாரிட்டி இழுபறி நீடித்து வரும் நிலையில், “திமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் வரும் மே 10-ஆம் தேதி வரை கட்டாயம் சென்னையிலேயே இருக்க வேண்டும், யாரும் தொகுதிகளுக்குப் போகக் கூடாது” என ஸ்டாலின் அதிரடி உத்தரவு போட்டுள்ளார். “கட்சியின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது; நான் எடுக்கும் எந்த முடிவுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முழுமையாகக் கட்டுப்பட வேண்டும்” என அவர் கறாராகக் கூறிவிட்டதால், அதிமுக-வுடன் கைகோர்த்து புதிய கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறார்களா அல்லது வேறு ஏதேனும் மெகா பிளான் இருக்கிறதா என அரசியல் விமர்சகர்கள் மண்டையைப் பிச்சிக்கொண்டு இருக்கிறார்கள்.