breaking: “திமுக கூட்டணியில் பிளவு?”… காங்கிரசுக்கு எதிராக ஸ்டாலின் அதிரடி.. தமிழக அரசியலில் பெரும் திருப்பம்..!!!
SeithiSolai Tamil May 07, 2026 11:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் ஒவ்வொரு நிமிடமும் அதிரடி திருப்பங்களைக் கண்டு வருகிறது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியுள்ள நிலையில், அக்கட்சிக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்க மக்கள் தயாராக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக, நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும், இதற்காக முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலினுக்கே வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி நாளை மாபெரும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், என்டிஏ (NDA) கூட்டணியை இழுக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், ஜனநாயக முறைப்படி ஆளுநர் உடனடியாக விஜய்க்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டணிக் குழப்பம் ஒருபுறம், ஆளுநருக்கு எதிரான போராட்டம் மறுபுறம் எனத் தமிழக அரசியல் களம் தற்போது உச்சகட்ட பரபரப்பில் தகித்து வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.