தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்கும் நேரத்தில் தற்போது திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நாளை பிற்பகல் 3:15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில காரணங்களால் அந்த நேரம் மாற்றப்பட்டு நாளை காலை 10 மணிக்கே விழா தொடங்கும் என அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில், 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அரியணை ஏறுகிறார்.
அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் மற்றும் விசிக-வின் வன்னி அரசுக்கு இடம் எனப் பல அதிரடி திருப்பங்களுடன் இந்த அமைச்சரவை அமையவுள்ளது.
நேரம் முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளதால், தவெக தொண்டர்கள் இன்றே சென்னை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். நாளை காலை 10 மணிக்குத் தமிழகமே ஒரு வரலாற்று மாற்றத்தைச் சந்திக்கப் போகும் வேளையில், நேரு ஸ்டேடியம் மற்றும் சென்னையின் முக்கிய இடங்கள் அனைத்தும் இப்போதே விழாக்கோலம் பூண்டுள்ளன.